புதன், 22 பிப்ரவரி, 2012

பயனுள்ள ஐந்து இலவச மென்பொருட்களின் புதிய வெர்சன்கள் டவுன்லோட் செய்ய...

மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது. அந்த வரிசையில் இன்று ஐந்து பயனுள்ள மென்பொருட்களையும் அந்த மென்பொருளின் புதிய வெர்சன்களை டவுன்லோட் செய்வது பற்றியும் இங்கு காண்போம். காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட கீழே உள்ள இந்த மென்பொருட்களில் உள்ளது.

இணையத்தில் இருந்து டோரென்ட் பைல்களை டவுன்லோட் செய்ய உதவும் இலவச மென்பொருள் UTorrent ஆகும். இந்த மென்பொருளின் மூலம் டோரென்ட் பைல்களை வேகமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த மென்பொருளில் டவுன்லோட் செய்யும் பொழுது பாதியில் நிறுத்தி பிறகு விட்ட இடத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம், மீடியா பைல்களை டவுன்லோட் செய்யும் பொழுதே பார்க்கலாம். இந்த மென்பொருளின் புதிய பதிப்பு இப்பொழுது வெளியிட்டு உள்ளனர். மென்பொருளை டவுன்லோட் செய்ய  - uTorrent 3.1.2


கணினி விண்டோக்களை ஸ்க்ரீன் ஷாட் எடுக்க உதவும் மிகவும் பயனுள்ள இலவச மென்பொருளாகும். இந்த மென்பொருளில் வெறும் ஸ்க்ரீன் ஷாட் வசதி மட்டுமின்றி Image Editor, Color Picker , White Board, Cross Hair மற்றும் பல வசதிகள் அடங்கி உள்ளது. இந்த மென்பொருளை உபயோகிப்பதும் மிகவும் சுலபமாக இருப்பதால் பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Picpick 3.1.2


ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினியை கட்டுப்படுத்தவும், பைல்களை பரிமாறிக்கொள்ளவும், உதவும் பயனுள்ள இலவச மென்பொருள் Team viewer ஆகும்.  உலகம் முழுவதும் மிகவும் பரவலாக உபயோகப் படுத்தப்படும் மென்பொருளாகும். இந்த மென்பொருளின் புதிய பதிப்பு இப்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இதன் புதிய பதிப்பை டவுன்லோட் செய்ய - TeamViewer 7.0.12541


கணினியில் இருந்து குறைந்த செலவில் உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் ஒருவரின் தொலைபேசிக்கும் விருப்பம் போல் பேசி மகிழ மிகவும் பயனுள்ள இலவச மென்பொருளாகும். இந்த மென்பொருளும் உலகில் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த இலவச பயனுள்ள மென்பொருளின் புதிய பதிப்பு 5.6 அண்மையில் வெளியிடப்பட்டது. தற்பொழுது அடுத்த பதிப்பான 5.7 Beta வடிவில் வெளியிட்டு உள்ளனர். இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Skype 5.7.0


உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் உலவிகளில் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. (சமீபத்தில் தான் கூகுள் க்ரோம் இதனை முந்தி இரண்டாம் இடத்தை தட்டி சென்றது). கூகுள் குரோம் வந்த பிறகு இதன் வளர்ச்சி விகிதம் குறைந்தாலும் எண்ணற்ற வசதிகளை கொண்டுள்ளதால் நிறைய பேரின் விருப்பத்திற்கு உரிய மென்பொருளாக இப்பொழுது உள்ளது. சமீப காலங்களில் பயர்பாக்ஸ் புதுப்புது வேர்சன்களை வெளியிட்டு கொண்டே உள்ளது. இப்பொழுது இந்த மென்பொருளின் புதிய பதிப்பை மொசில்லா நிறுவனத்தினர் வெளியிட்டு உள்ளனர். இந்த புதிய பதிப்பை டவுன்லோட் செய்ய -  Mozilla Firefox 10.0.2


இந்த மென்பொருட்களை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து புதிய வசதிகளை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக