You Tube பற்றி கேள்விப் படாதவர்கள் இல்லையென்றே கூறலாம். ஏனெனில் அனைத்துவகையான இணையத்தளங்கள் மற்றும் படங்கள் போன்றவற்றை கூகிளில்(Google) தேடுவது போன்று அனைத்து வீடியோக்களையும் நாம் இவ் You Tube தளத்தில் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் இத் தளத்தை பயன்படுத்தும் போது பலருக்கு மனதில் எழும் கேள்வி என்னவென்றால், எப்படி இவ் வீடியோவை கணனியில் தரவிறக்கிக்(DownLoad) கொள்வதென்பதுதான்....
அதற்காக இணையத்தில் எவ்வளவோ மென்பொருட்கள்(Software) காணப்படுகின்றன. அவற்றை தரவிறக்கி(DownLoad) பயன்படுத்துவதுதான். ஆனால் நாம் இப்போ பார்க்கப் போவது எதுவித மென்பொருட்களையும் கணனியில் நிறுவிக்(Install) கொள்ளாமலே வீடியோக்களை கணனியில் தரவிறக்கிக் கொள்வது பற்றித்தான்.இதற்கு நீங்கள் முதலில் You Tube இல் பார்த்து ரசித்த வீடியோவிற்குரிய URL ஐ Copy பண்ணிக்கொள்ளுங்கள். விபரத்துக்கு கீழ் உள்ள படத்தைப் பார்க்கவும்.
பின்னர் எனும் SAVETUBE தளத்தை திறந்து(open) கொள்ளவும். இதில் உள்ள விளம்பரத்தை நீக்குவதற்கு இதன் கீழே உள்ள “no thanks” எனும் button ஐ கிளிக் செய்யவும்.
இப்போ உங்களுக்கு கீழே உள்ளவாறான பக்கம் தோன்றியிருக்கும். இதில் உள்ள இடைவெளியில் நீங்கள் Copy செய்த URL ஐ paste செய்யவும்.
அதன் பின்னர் VIDEO எனும் பட்டனை அழுத்தவும்.
(நீங்கள் இவ் தளத்தில் முதன்முதலாக வீடியோவை தரவிறக்க ஆரம்பிக்கின்றீர்கள் என்றால் VIDEO எனும் பட்டனை அழுத்திய பின்னரும் மாற்றம் ஏதும் ஏற்படாது.
இதற்காக சிறியதொரு செய்கையை மேற்கொள்ள வேண்டும். அதற்காக கீழ்வரும் செயலைச் செய்க.)
இத் தளத்தின் இடதுபக்க மேல்மூலையில் உள்ள HELP என்பதை கிளிக் செய்யவும். இப்போ கீழ் உள்ளது போன்று காட்சியளிக்கும்.
இதில் DownLoad Java (Free) என்பதை கிளிக் செய்யவும். இப்போ கீழ் உள்ளது போன்று Free Java Download எனும் பட்டன் தோன்றும்.
இதை கிளிக் செய்து அதனை கணனியில் நிறுவிக்(Install) கொள்ளவும்.
இப்போ paste செய்த URL இற்கு அருகே உள்ள VIDEO எனும் பட்டனை கிளிக் செய்யவும்.
இப்போ கீழ் உள்ளது போன்று பல்வேறு வகையான தெரிவுகள் காணப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக